வியாழன், 8 செப்டம்பர், 2016

முதல் ஸ்பரிசம்...

முதல் ஸ்பரிசம் அது!


சிரித்தேன் சிரித்தாள்

தொட்டேன் தடுத்தாள்
விட்டேன் அணைத்தாள்!

ஆறாம் அறிவும்
பாழாய்ப் போனது!

நெருங்கினாள் நான்
நொறுங்கினேன்!

இமை வருடினாள் நான்
இதழ்’கள் பருகினேன்!

வேண்டாமென எச்சரித்தாள்
இது போதாதென நச்சரித்தேன்!

காதலும் காமமும்
ஒரு புள்ளியில் சேர்த்துவிட்டாள்!

சம்மதம் கேட்கவில்லை
சங்கடமும் அவளுக்கில்லை!

அகம் புறம் எங்கெங்கும்
முத்தமிட்டு சிலிர்க்கவைத்தாள்!
அகவை அது மறந்து
நித்தம் நித்தம்
தேகம் துளிர்க்கவைத்தேன்!

வெட்கத்தில் முகம் மலர்ந்தாள்!
சொர்க்கத்தை நானும் கண்டேன்
பக்கத்தில் அவளும் இருந்தாள்!

மடியினிலே சில நேரம்
மார்பினிலே சில நேரம்
முதுகோடு சில நேரம்
மூர்ச்சையானேன் அந்நேரம்!
ஆகா, மோச்சமானேன் எந்நாளும்!

அச்சம் அது மறந்து
மிச்சமின்றி அள்ளிக்கொடுத்தாள்
சொச்சமும் ருசித்துவிட்டு
மச்சம் கூட சிவக்க வைத்தேன்!

மலராக மாறிவிட்டாள்
மகரந்தம் நானும் கொண்டேன்!

சிலையாகி அவள் கிடந்தாள்
செதுக்கும் போதே சிற்பியானேன்!

நாணத்தில் தலைகுனிந்தாள்
நானும் அதில் பாதி அடைந்தேன்!

#அவளதிகாரம்

Get a copy of Book now,

இந்தியாவில் வாங்க,
http://www.flipkart.com/item/9788193001837

சிங்கப்பூரில் வாங்க,
http://list.qoo10.sg/item/AVALATHIKAARAM/419615613

மற்ற (இண்டர்நேஷனல்) அனைத்து நாடுகளிலும் வாங்க,
http://www.noolulagam.com/product/?pid=13124

| FREE Home Delivery || Cash on delivery

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

என் காதலே...




உன் நினைவலைகள் வருவதால்




நெஞ்சில் ஓர் சுனாமி...








விடியலுக்கு ஏங்கும் மலராய் நான்




அதிகாலை கோலமிடும் வேளையில்




உன்னை தரிசிப்பதற்க...








என்னை பார்க்கும் போது




புன்னகை செய்யும்




உன் இதழ்களை விட




என்னை காணா போது




கண்ணீர் சிந்தும்




உன் கண்களையே




அதிகம் நேசிக்கிறேன்...












செடியில் இருக்கும் ரோஜாவை ரசிதவனுக்கு




முட்களை மட்டும் பரிசாக அழித்ததன்...












கண்களை மூடி உறங்கும் காதலியே




உன் இதயத்தை எனும் திற




கனவில் நான் வர...












கனவுகளின் நிறைவேறா காதல்




கவிதைகளின் தொகுப்பால்




கதிரவன் உதிர்த்த பின்பும்




கலையவில்லை தூக்கத்தை




கவிதையாய் மலரும் பூக்களை கூட




ரசிக்கும் மனமில்லை








வரும் காலம்








என்னவளே என்னருகே நீ இருக்கும்




அந்த வேலை...








-இவை அனைத்தும் உன்னை பற்றிய




கவிதை எனிலும் உன்னைபோன்று




அழகாய் இல்லை ஏன்?..........









திங்கள், 7 மார்ச், 2011

manase





ஒரு நிமிடத்து பார்வையிலே




உணர்ந்து கொண்டவள் நீ




நான் காதலிப்பதை...








பல வருட பழக்கத்திலும்




உணர வில்லை நான்




நீயும் காதலிப்பதை...